175
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் , எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயாில் அழைக்கப்படும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love