137
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,910 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
இந்த அறிக்கையின் பிரகாரம், மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 19 கொரோனா மரணங்களும், ஜூன் 01 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 08 ஆம் திகதி வரை 48 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
Spread the love