இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை .ரத்து செய்யக் கோரும் தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை மீதான இத்தீர்மானத்துக்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் 40 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
ஸ்பெயின் – மொராக்கோ எல்லை , ரஸ்யா , இலங்கை ஆகியவற்றின் மனித உரிமை நிலைமை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் மிக அண்மைய மனித உரிமை மீறல்கள் தொடா்பில் இலங்கையின் ஆபத்தான சரிவு குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.