182
பிரான்ஸ் தலைநகர் பாாிஸில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் கடுமையான போராட்டத்திற்குப் பின் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்சுடன் போட்டியிட்ட ஜோகோவிச் கடுமையாகப் போராடி இறுதியில் 6(6)-7(8), 2-6, 6-3, 6-2, 6-4 என வெற்றி பெற்றுள்ளாா்.
சுமார் 4.40 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ஜோகோவிச்சின் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love