195
நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது.
வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love