கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், இன்னும் 20 வருடங்கள் வரையில் காணப்படுமென தெரிவிக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீர, இதன் பாதிப்புக்களை டொலர்களில் மதிப்பிட முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, தீப்பற்றி எரிந்த கப்பலில் இருந்து, கடலில் கலந்த பாரியளவான பிளாஸ்டிக் பொருள்கள் தற்போது 40 கொள்கலன்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடலில் இன்னும் எவ்வளவு பிளாஸ்டிக் பொருள்கள் இருக்குமென ஆராய முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஆயிரத்து 486 கொள்கலன்கள் இருந்ததாகவும்,இது நாட்டின் பிரதான உற்பத்தி நிறுவனங்கள் இரண்டுக்கு, இரு மாதங்கள் தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் இருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, கப்பல் நிறுவனத்திடமிருந்து நட்டஈட்டைப் பெற வேண்டும் எனவும், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.