கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைக் குடும்பம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் சமூகத் தடுப்பில் வாழ அவுஸ்திரேலியா அனுமதிக்கவுள்ளது.
பிரியா – நடேஸ் மற்றும் அவா்களது இரு மகள்மாா்கள் அடங்கிய குடும்பம் அவா்களது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
குறித்த குடும்பத்தின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டு பிரதான வைத்தியாலை ஒன்றில் குடும்பத்தை பிரித்து அனுமதிக்கப்பட்டு வைத்திருந்தமைக்கு பலத்த எதிா்பபு எழுந்துள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா அவா்கள இவ்வாறு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கவுள்ளது.
குயின்ஸ்லாந்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு மீண்டும் அனுமதிப்பதற்கு பதிலாக, மேற்கு நகரமான பெர்த்தில் சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் வாழ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை தற்காலிகமானது எனக் கூறப்பட்டுள்ள நிலையில் அக்குடும்பத்தின் எதிர்காலம் குறித்து தெளிவில்லாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது