235
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தியாறு அம்பூஸ்குடா பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஜே.ஆர் ரக கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்றையதினம் வாழைச்சேனை காவல்துறையினா் குறித்த கைக்குண்டினை மீட்டுள்ளனர்.
குறித்த கைக்குண்டு இறுதி யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் வாழைச்சேனை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love