உலகம் பிரதான செய்திகள்

அமேசன் நிறுவனரின் முன்னாள் மனைவி 20,000 கோடி ரூபா நன்கொடை

அமேசன் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்கொட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவா் “நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத” மக்களுக்கு இந்தப் பணத்தை வழங்குவதாக தொிவித்துள்ளாா்.

இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தொிவு செய்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவராக உள்ள அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசன் நிறுவனர் ஜெப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது.

கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கியிருந்தாா். ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22வது பணக்காரராக இருப்பதாக போர்ப்ஸ் இதழ் தொிவித்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.