இலங்கை பிரதான செய்திகள்

“மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது”

கொரோனா தொற்றால் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மக்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு பாரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளதென பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால், மீன் வளங்கள் அழிவடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் கப்பலால் கடல் வளம், சுற்றாடல், மீன் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கணக்கிட கூட முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மீனவர்களின் வாழ்வில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எரிபொருள் விலையானது. “மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பது” போன்ற செயலென தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்றாலும் தீப்பற்றியெரிந்த கப்பலால் ஏற்பட்ட பாதிப்பாலும் எரிபொருள் விலையேற்றத்தாலும் ஆயிரக்கணக்கான மீன்பிடிக் குடும்பங்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் தான். ஆனால், இது இப்போது செய்யப்பட்டிருக்கக் கூடிய செயலல்ல. எனவே இத்தீர்மானம் நியாயமான ஒன்றல்ல என்பது தெளிவாக விளங்குவதாகவும், இதனால் பலரது வாழ்க்கை சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவ்வாறான விலையேற்றங்களால் வறுமையில் பீடிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் இதற்கு முன்னைய அரசாங்கம் இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரித்த போது மீன்பிடி சமூகத்தினருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆகையால் மேற்படி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.