கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷமன் மித்ரு இன்று காலை உயிரிழந்துள்ளாா். குறைந்த செலவில் உருவாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற தொரட்டி படத்தின் மூலம் நாயகனகாக அறிமுகமானரும் அப்படத்தினை தயாாித்தவருமான ஷமன் மித்ருவே இவ்வாறு கொரானா தொற்று காரணமாக உயிாிழந்துள்ளாா்.
43வயதான நடிகர் ஷமன் மித்ரு சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும், தொரட்டி படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தான் பிரபலமானார்.
அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்த நேரத்தில் அவர் கொரோனா தொற்றால் உயிாிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது