நாட்டை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களைப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக நியமிக்க இலங்கை இராணுவம் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
கடந்த 08 ஜூன் 2021 அன்று மேற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு உட்பட்டபிரதேசங்களிலுள்ள காலாட்படை அணிகளுக்குஇரகசிய உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் பணிக்கு மீண்டும் திரும்ப விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களின் தகவல்களை ஜூன் 14க்கு முன்னதாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னோக்கிச் செல்லும் உத்தி
என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கை இராணுவத் தளபதியால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உத்தியின் படி, இதக் கட்டளை பாதுகாப்பு படையினரின் மேற்குத் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த உத்தரவின் நகலை தாங்கள் கண்டுள்ளதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு ஜே டி எஸ்செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் கூற்றின்படி நாட்டின் நான்கு நிர்வாக மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, புத்தளம், குருநாகல, ரட்ணபுர மற்று கேகாலை ஆகிய மாவட்டங்கள் மேற்கு கட்டளைப் பிராந்தியத்தின் கீழ் வருகிறது. இலங்கைத் தீவின் 29.37 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்ட இந்தப் பிராந்தியம் மொத்தமாக 19,475 சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கிய பகுதியாகும். அதுமட்டுமின்றி நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக அதாவது 12 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அந்தப் பிராந்தியத்தில் வாழ்கின்றனர்.
புதிதாக பதிவு செய்யப்படும் முன்னாள் படை வீரர்கள், உள்ளூர் புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவது, சட்ட விரோத செயல்களுக்கு எதிராகப் போராடுவது (மணல் அள்ளுதல், போதைப் பொருள் கடத்தல் போன்றவை), இயற்கை பேரிடர் காலங்களில் அவசரக்கால சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் இதர சமூக சேவைகளில் பணியாற்றுவார்கள்
என்று பிரிகேடியர் ரொஹான் வஜிர பொன்னம்பெரும கையெழுத்திட்டுள்ள அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக 2019 நவம்பர் மாதம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, இலங்கையில் இராணுவ மயமாக்கல் பாரிய ஏற்றம் கண்டுள்ளது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கையாளுவதற்கு என்று கூறப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 இராணுவ அதிகாரிகள் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
நாட்டின் கோவிட் தடுப்பு செயலணிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவே தலைமையேற்றுள்ளார். இலங்கையில் குறைந்தபட்சம் 40 முக்கிய அரச பதவிகளுக்கு முன்னாள் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த ஆண்டு ஜனவரியில், ஜே டி எஸ், உண்மைக்கும் நீதிக்குமான சமாதான செயற்திட்டமான ஐடிஜேபி ஆகியவை நிர்வாகத்தில் இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் இடம்பெற்றுள்ளனர் என்கிற விரிவான அறிக்கையைவெளியிட்டது. அந்த அறிக்கையின்படி குறைந்தது 40 முன்னாள் இராணுவத்தினர் அரசின் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.