எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தயார் செய்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று காலை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
10 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.