சீன – இலங்கை கூட்டு நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ள திஸ்ஸமகாராமய வாவி துப்புரவு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் வித்தியாசமான ஆடைகள் அணிந்த சிலர் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்ததாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடைக்கு ஈடான சீருடைகளை இவர்கள் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க இராணுவம் இலங்கையில் கால்தடம் பதிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய MCC உடன்படிக்கை மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டது. எனினும், தென் பகுதியில் சீன மக்கள் விடுதலை இராணுவம் பயன்படுத்துகின்ற சீருடைக்கு ஈடான சீருடைகளை அணிந்த வௌிநாட்டவர்களை இந்த வேலைத் தளங்களில் காண முடிகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திஸ்ஸமகாராமய வாவியில் ஆரம்பமாகியுள்ள சிவில் பணிகளில் பங்குபெறும் இந்த வெளிநாட்டவர்கள் யார் என கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.