நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் A.H.M.D. நவாஸ் விலகியுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி சட்டவிரோதமாக கைது செய்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என உத்தரவிடுமாறு இந்த மனுக்களின் மூலம் கோரப்பட்டுள்ளது.
பிரீதி பத்மன் சூரசேன, A.H.M.D. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று (23.06.21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன
இதன்போது, தனிப்பட்ட காரணத்தினால் நீதியரசர் A.H.M.D. நவாஸ் இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.