Home இலங்கை போலியான செய்தி வெளியிட்டமை? அசேல சம்பத் கைது!!

போலியான செய்தி வெளியிட்டமை? அசேல சம்பத் கைது!!

by admin

பிலியந்தல பகுதியில் வைத்து நேற்று (25.06.21) இரவு அசேல சம்பத் எனும் நபர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூப் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரிடம் விசாரணைகள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எக்ஸ்ட்ரா செனொகா கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு எடுத்து வந்து அதில் சில தரமற்ற திரவங்களை கலந்ததன் பின்னர் மக்களுக்கு செலுத்துவதாக அவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்தி ஒன்றைப் பரப்பியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More