Home உலகம் சிட்னி முடக்கம்! இஸ்ரேலில் மாஸ்க்!பங்களாதேஷில் முழு உள்ளிருப்பு!! உலகெங்கும் டெல்ரா மேலெழுகிறது

சிட்னி முடக்கம்! இஸ்ரேலில் மாஸ்க்!பங்களாதேஷில் முழு உள்ளிருப்பு!! உலகெங்கும் டெல்ரா மேலெழுகிறது

by admin

படம் :சனிக்கிழமை பகல் வெறிச்சோடிக் காணப்பட்ட சிட்னியின் ஒரு பகுதி)

பிரான்ஸில் புதிய டெல்ரா வைரஸின் முதல் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்டிருந்த எட்டுப் பேரில் இருவர்உயிரிழந்துள்ளனர். Gers மாவட்ட மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த 42,60 வயதுகளையுடைய இருவரேஉயிரிழந்தனர் என்று அந்தப் பிராந்தியசுகாதார சேவை அறிவித்துள்ளது. அவர்கள் இருவரும் வைரஸ் தடுப்பூசி ஏற்றியிருக்கவில்லை. வேறு நோய்களாலும் பீடிக்கப்பட்டிருந்தார்கள் என்று தகவல்வெளியாகி உள்ளது.

பங்களாதேஷ் போன்று சில நாடுகள் டெல்ரா வைரஸ் தொற்றுக் காரணமாக முழு அளவில் முடக்க நிலைகளைச் சந்தித்துள்ளன. அங்கு வரும் திங்கட்கிழமை தொடக்கம் சுகாதார சேவைகள் தவிர்ந்த அனைத்தும் மூடப்படுகின்றன. ஒருவார காலம் எவரும் வீடுகளை விட்டு வெளியேவருவது தடுக்கப்பட்டிருக்கும் என்று அரசுஅறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.மிக இறுக்கமான உள்ளிருப்புக் கட்டுப் பாடுகளை அமுல் செய்வதற்காக இராணுவத்தின் உதவியும் பெறப்படவுள்ளது

.?சிட்னி

கிட்டத்தட்ட வழமை நிலைமைக்குத்திரும்பி இருந்த அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பெரும் பிரதேசம் மீண்டும் முடக்கப்படுகிறது. வேகமாகப் பரவும் வலுவுள்ள டெல்ரா திரிபை ஒருசில நாள் முடக்கங்களால் தடுக்க முடியாது என்றுதெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் நாட்டின் பெரிய நகரமாகிய சிட்னியை மீண்டும் இரண்டு வார காலத்துக்கு முடக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டு விமானி ஒருவரை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ஏற்றியிறக்கும் பணிகளில் ஈடுபட்ட வாகனச் சாரதி ஒருவரை மூலமாகக் கொண்டே சிட்னியில் கொத்தணியாகப் பலருக்கு டெல்ரா வைரஸ் முதலில் தொற்றியது எனக் கூறப்படுகிறது.கொரோனா வைரஸின் மிக மோசமானவடிவமாக உருவெடுத்துள்ள டெல்ராகாரணமாக முடக்கப்படுகின்ற முதலாவது பெரிய நகரம் சிட்னியே ஆகும்.

?இஸ்ரேல்

பெரும் எடுப்பிலான தடுப்பூசி திட்டத்தின் மூலம் தனது நாட்டு மக்களை சுகாதாரக் கட்டுப்பாடுகளில் இருந்து பூரணமாக விடுவித்த முதல் நாடு என்ற பெருமை யைப் பெற்றிருந்த இஸ்ரேலில் மீண்டும் டெல்ரா தொற்றுக்கள் மேலெழுகின்றன.மாஸ்க் அணிவதை முற்றாக முடிவுக்கு கொண்டுவந்திருந்த இஸ்ரேல் இப்போது மூடப்பட்ட பொது இடங்களிலும் வர்த்தகநிலையங்களிலும் மாஸ்க் அணிவதைமீளவும் கட்டாயமாக்கி உள்ளது.ஐரோப்பிய நாடுகளில் வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் 90 வீதமான தொற்றுக்களுக்கு டெல்ரா வைரஸே காரணமாக இருக்கும் என்று நோய்த் தடுப்பு மற்றும்கட்டுப்பாடுகளுக்கான ஐரோப்பிய நிலையம்(European Center for Disease Prevention and Control) எச்சரித்துள்ளது.?

சுகாதார நிறுவனம் ஆலோசனை

இதேவேளை – இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டவர்கள் மாஸ்க் அணிவதை நிறுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.டெல்ரா வைரஸ் காரணமாகப் பல நாடுகளிலும் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீள நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையைச் சுட்டிக் காட்டியே உலக சுகாதார அமைப்பு இவ்வாறு உலக மக்களுக்கு ஆலோசனை வெளியிட்டிருக்கிறது.

இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றியவர்கள் தாங்கள் தொற்றில் இருந்து முழுப் பாதுகாப்புப் பெற்று விட்டனர் என உணர முடியாது. டெல்ராபோன்ற திரிபுகள் உலகெங்கும் தொடர்ந்து வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே ஊசி ஏற்றியவர்கள் மாஸ்க் அணிவதை நிறுத்திவிட வேண்டாம். சுகாதாரக் கட்டுப்பாடுகளையும் விடாமல்தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் -என்று சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

(—————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.26-06-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More