கொவிட் நிலமை காரணமான மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு ஜூலை 1ம் திகதி முதல் ஜூலை 13 ஆம் திகதி வரை தடை விதிக்கப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து வரும் பயணிகளுக்கே இவ்வாறு இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்படவுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஆபிரிக்க கண்டத்தின் எட்டு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இலங்கைக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.