லண்டனில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளாா். கொரோனா அச்சறுத்தலால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் 7 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியவரும் , 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் காயத்தால் முதல் சுற்றிலேயே வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாா்.
பெலாரஸ் நாட்டின் அலைக்சண்ட்ரா ஸஸ்னோவிச்சை எதிர்த்து விளையாடிக்கொண்டு இருந்த போது டென்னிஸ் களத்தில் கால் சறுக்கியதால் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதனையடுத்து அவா் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டியேற வேண்டியேற்பட்டுள்ளது.
இதனால் முதல் சுற்றிலேயே நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறிய செரீனா 8-வது முறையாக விம்பிள்டன் கிண்ணத்தினை வெல்லும் வாய்ப்ர் கைவிட்டுப் போயுள்ளது. செரீனா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.