ஆறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையானது நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு இன்று (30) முதல் நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. .
அதேவேளை குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இலங்கை தூதரகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இல்லையெனின் குறித்த நாடுகளின் விமான நிறுவனங்கள் அனுமதி வழங்கிய நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.