192
ஜப்பான் நாட்டுத் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவா் உயிாிழந்துள்ளதுடன் 20 போ் வரையில் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்ற நிலையில் மீட்புப் பணிகளின் போது இதுவரை இருவாின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தொடா்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love