164
சகோதாிகளான 15 மற்றும் 12 வயதான சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்த குறித்த சிறுமிகளின் சிறிய தந்தைக்கு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சிறிய தந்தை மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமின்றி நிரூபணமாகியதனையடுத்தே அநுராதபுரம் இலக்கம் 2 மேல் நீதிமன்றத்தின் முன்னோடி நீதிபதியான பேராசிரியர் சுமுது பிரேமசந்திர, பிரதிவாதிக்கு இவ்வாறு 90 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளாா்.
Spread the love