198
கடந்த ஒரு வாரமாக காணாமல் போயிருந்த நெடுந்தீவைச் சோ்ந்த மீனவர் தமிழகம் வேதாரணியம் கடற்கரைப்பகுதியில் இன்று (07)சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டர் மரியதாஸ் என்ற மீனவரே கடந்த 1ம் திகதி நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் ஒரு வாரமாக கரை திரும்பவில்லை என குடும்பத்தினர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் அவரது சடலம் தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love