சினிமா பிரதான செய்திகள்

நடிகர் திலீப்குமார் உயிரிழந்துள்ளாா்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். அவா் 1944-ல் சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உட்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளாா்.. வயது மூப்பு காரணமாக இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தநிலையில் கடந்த வாரம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்தநிலையில் அவா் இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 98 ஆகும் . இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.