157
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்களை தமது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையி்ல் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உதயபுரம் பகுதியில் வைத்து 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்
Spread the love