இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

தாய்க்குத்தாயாகவும் தாதிக்குத் தாதியாகவும் இயங்கிவந்த உள்ளுர் மருத்துவிச்சி மரபின் மீளுருவாக்கம் குறித்து! கலாநிதி சி.ஜெயசங்கர்!


மகப்பேறுஅதற்கானமகப்பேற்றுச்சிகிச்சைஎன்பதுதொழில் நுட்பவினையாற்றல் மட்டுமல்ல. அதுஅன்புஆதரவுஆற்றுப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டது. அதன் காரணமாக அது பண்பாட்டுடனும் தொடர்புடையதாக இருப்பதும் கவனங்கொள்ளத் தக்கதாகும். மனிதஉடல் பண்பாட்டாலும் கட்டுப்பட்டதாக இருக்கின்றது. குறிப்பாகபெண்களதுஉடல் ஆணாதிக்கப் பண்பாட்டால் கட்டுப்பட்டிருப்பதும் கருத்திற் கொள்ளப்படவேண்டியதாகும்.


தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் பெண்களதுஉடல் அவளுக்குரியதல்லாமல் கணவனுக்குரியதாகவே கட்டமைக்கப்பட்டிருப்பதும், அதனைவலுவாக்கம் செய்யும் கருத்தாக்கங்கள் பக்தியின் பெயராலும், பண்பாட்டின் பெயராலும் மரபுரீதியான முறைமைகளில் இருந்து கல்வி உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் வரையிலாக அறிவூட்டலாகவும் மகிழ்வூட்டலாகவும் மிகப் பலமாக அதிகாரபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுவருகிறது.


இந்நிலைமையைஎதிர்கொள்ளும் பெண்ணிலைவாதிகளும் முற்போக்குச் சக்திகளும் மிகவலுவான முன்னெடுப்புக்களில் சவால்களை எதிர்கொண்டு ஈடுபட்டுவருகிறார்கள். இத்தகைய தொருபின்னனியில் தமிழர் அறிவுமரபுகளில் ஒன்றானமருத்து விச்சிமுறையின் இல்லாதொழிப்பினது பின்னணியும் அதன் மீளுருவாக்கத்தின் முக்கியத்துவமும் பற்றிய உரையாடலுக்கான அறிமுகமாக இக்கட்டுரைஎழுதப்படுகிறது.


இக்கட்டுரை எழுதப்படும் 2021இலும் பிரசித்தமான மருத்துவிச்சிமாரைச் சந்திக்கமுடிகிறது. அவர்களதுபணியின் பெறுமதியைஅவர்கள் வாழ்ந்த வாழுகின்ற சமூகங்களில் அறிந்து கொள்ளமுடிகிறது. பேராளுமைகளாக வலம்வந்த, பேரிடர் காலங்களிலும் பணிசெய்தமருத்துவிச்சி அம்மாக்கள் பற்றியகதைகள் அவர்களது ஆளுமையை அறிவைதிறனை புலப்படுத்துவதாக இருக்கின்றன. ஆயினும் அவர்கள் தம்பணியைச்செய்வதுசட்டத்திற்குப் புறம்பானதாகவும் அச்சத்துடன் கூடியதாகவுமே இருந்துவருகிறது. அசாதாரண சூழ்நிலைகளில் தாம் வாழும் சூழலிலும் மருத்துவமனைகளுக்குங்கூட அழைக்கப்பட்டுமகப்பேற்றுப் பணியை நிறைவேற்றியிருப்பதுங்கூட அறியக் கூடியதாகஉள்ளது. ஆயினும் மருத்துவிச்சிமாரது மகப்பேற்று மருத்துவப் பணிகுற்றப் பரம்பரைக்குரியதாக ஆக்கப்பட்டிருப்பதன் அரசியல் இதுகாலவரையில் ஆராயப்படாது அல்லதுகவனத்திற் கூட இல்லாமல் போனது. கேள்விகேட்கப்படாத காலனியமயமாக்கத்தின் வலிமையையே வெளிப்படுத்திநிற்கிறது.

தமிழர் மரபில் மருத்துவிச்சிஎன்பவள் தெய்வத்தாயாகவே கொண்டாடப்படுகின்றாள். ஆயினும் அவள் குடும்பத்தினதும் சமூகத்தினதும் உறுப்பினர். அவளுக்கான குடும்பஞ் சார்ந்த,சமூகஞ் சார்ந்தகடமைகளின் பொறுப்புடையவளாகவும் அவளதுவாழ்க்கை இருந்திருக்கிறது. ஆயினும் மகப்பேற்றுப் பணியினைஎந்த இடத்திலும் எந்தநேரத்திலும் எந்தச் சூழலிலும் ஆற்றுபவளாக இருந்திருக்கின்றாள். மருத்துவிச்சி பற்றியகதைகள் இவற்றைமிகவும் விவரமாகவும் ஆழமாகவும் தெரிவிக்கின்றன. இன்றும் வாழ்ந்துவருகின்ற மருத்துவிச்சிகளது வாழ்க்கை மேற்படிநிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றன.


ஆயினும் நவீனகுழந்தைமகப்பேற்றுவைத்தியம் ஆண்களுக்குரியதாகவும் மிகப் பெருமளவுக்கு அறுவைச்சிகிச்சைக்கு உரியதாகவும் இருந்துவருவதன் காரணங்கள் கலந்துரையாடப்பட வேண்டியவை.


நவீனமருத்துவத் துறையைச் சார்ந்தபெண்கள் நேரகாலமில்லாமல் அழைப்புக்கள் வருமென்பதால் பெருமளவிற்கு இத்துறையைத்தெரிவதில்லைஎன்றஅறிமுகஉரையாடல்கள் நவீனகாலத்தில்அதன் கல்வியின் இயங்குநிலைபற்றிச் சிந்திக்கவேண்டியதாக இருப்பது மருத்துவிச்சிபற்றிய உரையாடலின் கிளைக்கதை. நவீனகாலம், நவீனஅறிவு, நவீனமருத்துவம் என்ற பெயர்களில் நிகழ்த்தப்பட்ட காலனியகாலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தேதமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நகரங்கள் நாகரீகங்களை உருவாக்கியிருக்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தெரியாமலா இவற்றையெல்லாம் சாதித்திருக்கிறார்கள்?, சாதித்ததற்கான மனிதர்களைஎல்லாம் உருவாக்கியிருக்கிறார்கள்? இதில் பெரும் துயரமென்னவென்றால் ‘கல்தோன்றிமண்தோன்றாக் காலத்து’ தமிழரை உருவாக்குபவர்கள் நவீனகாலத்துத்தமிழரின் நிலைபற்றிய சிந்தனை உடையவர்களாக எந்தளவிற்கு இருக்கிறார்கள் என்பதுமிகப் பெரும் கேள்வியாகும்.


இந்நிலையில் மருத்துவிச்சிமாரைஓரங்கட்டும்,அறிவுபூர்வமற்றதெனக் கட்டமைக்கும் முன்னெடுப்புக்கள் மருத்துவமிசனரிகளின் வருகையுடன் ஆரம்பிப்பதைக் காணமுடிகிறது. காலனியத்தின் பலபரிமாணங்களில் மருத்துவமும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டுவெற்றியும் எய்தப்பெற்றிருக்கிறது.


அறிவுபன்மைத்தன்மைவாய்ந்தது, கதவுகள் கொண்டு மூடிவிடமுடியாதது, ஒன்றுடன் ஒன்று கொடுத்துவாங்குவது ஆக்கபூர்வமானது ஆனால் ஒன்று இன்னொன்றைப் பண்பாட்டுச் சிதைப்புச் செய்து தன்னை நிலைநிறுத்துவதென்பது மேலாதிக்க நோக்குடையது. இன்றையகொரோனாப் பெருந்தொற்றுக் காலத்திலும் பல்வகைக் குணப்படுத்தல் முறைமைகள் நடைமுறையில் இருப்பினும் எந்தவகையிலான ஆய்வுகளுமின்றி அவைநிராகரிக்கப்படுவதும், பிசோதனைகளில் இருந்துவருகின்ற தடுப்பூசிமருந்துகள் மட்டுமே அதிகாரபூர்வமானவையாகக் கொள்ளப்படுவதும் இதன் அரசியலைப் புரிந்துகொள்ளவைப்பதாக இருக்கிறது.


இத்தகையதொருபின்னணியில் நவீனகாலத்தில் நவீனஅறிவியலில் நூற்றாண்டுகள் காலவரலாறுகள் கொண்டஉள்ளுர் அறிவுமுறைகள் மூடநம்பிக்கைகளாக, அறிவுபூர்வமற்றவையாக ஆய்வுகூடங்கள் என்றபெயரில் உருவாக்கப்பட்ட இடங்களில் பரிசோதித்து உறுதிப்படுத்தப்படாதவையாக நிராகரிக்கப்பட்டன.


இவ்வாறுதான் பாடசாலைபோகாதபலதலைமுறைகள் கொண்ட பயில ;முறைஅறிவாளர், தொழில்வாண்மையாளர் பாமரரெனஅடையாளப்படுத்தப்பட்டனர். நவீனஅறிவின் தராதரப் பத்திரங்களற்ற அவர்களது அறிவு, திறன் என்பன நவீனகால நிருவாகக் கட்டமைப்புக்களில் நிராகரிக்கப்பட்டன.


இத்தகையநவீனகாலமெனும் காலனியச் சூழலில் மருத்துவிச்சிமரபின் மீளுருவாக்கத்திற்கான உரையாடலுக்கான அறிமுகமாக இக்கட்டுரைஅமைகிறது. பண்பாட்டின் பெயராலும் உணவுமற்றும் மருத்துவத்தின் பெயராலும் மேலாதிக்கம் பெற்றிருக்கிற வணிகமானது மனிதஉடலைஅதன் பெருஞ் சந்தையாக்கிக் கொளுத்துவருவதொன்றும் புதிரானதல்ல உலகம் முழுவதும் மேற்படிபண்பாட்டுஅறிவியல் மேலாதிக்க நிலைமைக்கு மாற்றான செயற்பாடுகள் வலுவாகமுன்னெடுக்கப்பட்டு வருகின்ற பின்புலத்தில், தமிழ்ச் சூழலில் குழந்தைபெற்றெடுக்கும் தாய்க்குநெருக்கமான’தாய்க்குத்தாயாகவும் தாதிக்குத் தாதியாகவும்’ இயங்கிவந்ததொரு பெரும் மரபின் மீளுருவாக்கம் என்பதுதாயின் உடலை மீட்டெடுக்கின்ற மிகப்பெரும் பண்பாட்டு நடவடிக்கையாகும்.தாயின் உடலின் மீட்டெடுப்பு என்பது அனைத்துஉயிர்களதும் அவைவாழும் சுற்றுச்சூழலினதும் மீட்டெடுப்புடன் தொடர்புடையதாகின்றது.

குடும்பத்தவளாகவும், சமூகத்தவளாகவும், அறிவாற்றல் கொண்டவளுமான மருத்துவிச்சியின் குணாதிசயம் செய்தியாகட்டும். புதியதொருகாலஉருவாக்கத்திற்காக…

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.