Home இலங்கை விமல் – கம்மன்பிலவின் அதிகாரங்கள் குறைகிறதா?

விமல் – கம்மன்பிலவின் அதிகாரங்கள் குறைகிறதா?

by admin

ஆளும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்து மீளப்பெற அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்விருவரிடமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நிதியமைச்சராக பசில் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுப்படுத்தி, இலக்கை எட்டிக்கொள்வதற்கு புதிய அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கீழான ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்படவேண்டிய அமைச்சுப் பதவிகளை, அக்கட்சிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தமே அமைச்சர்களான உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரிடமிருக்கும் அமைச்சுகளின் விடயதானங்களை பகிர்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசிப்பதாக அரசியல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அரசாங்கத்தால் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் அமைச்சுகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளதாகவும், புதிய அமைச்சவை மாற்றத்தில், சுகாதாரம், பொலிஸ், தொழில் மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More