157
240 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாா்.
இலங்கையின் வெளிநாட்டு கடன் தொகை சுமார் 45 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவா் எனினும் இலங்கையிடம் 240 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுகின்றன எனவும் இவ் வளங்களை முறையாகப் பயன்படுத்தினால் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலை தொடர்பான பிரச்சினையை நன்கு கையாள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love