யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உட்பட ஆசிரிய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்