தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி சில துறையினரின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கலும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மிருக காட்சிசாலையினை பார்வையிட ஒரு தடவையில் 25 சதவீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளக இசை நிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.