தலைமன்னார் கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பின் 5 ஆவது தீடைப் பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்றை அடையாளம் காண்டுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பாக கடற்படையினர் தலைமன்னார் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அப்பகுதிக்கு சென்ற தலைமன்னார் காவல்துறையினா் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று குறித்த சடலத்தை மீட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்மேலதிக விசாரனைகளை தலைமன்னார்காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.