கிளிநொச்சி – கெளதாரிமுனை கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா். யாழ் – மீசாலை பகுதியை சேர்ந்த 30 வயதான தபாலக உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இருந்து நண்பர்களோடு கெளதாரிமுனைக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் அங்குள்ள கடலில் குளித்த போது கடலில் மூழ்கிய இளைஞனை மீட்ட நண்பர்கள் அவரை பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் வழியில் அவா் உயிாிழந்து விட்டாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது