பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சியில் கசிப்பு வடிப்பதற்கான கோடா மற்றும் கசிப்பு வடிப்பதற்குரிய உபகரணங்களுடன் மதுவரி திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் வல்லிபுரகுறிச்சி பகுதியில் சுமார் 65 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்களை மறைத்து வைத்திருந்த வேளையில் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளனர்