மீண்டும் நடிக்க வரும் நடிகா் அஜித்தின் மனைவி ஷாலினி மெகா பட்ஜெட் படத்தில் நடிக்கவுள்ளாா். 1980 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி பொியவா் ஆன பின்னா் , காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாா்.
பின்னா் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷாலினி, சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறாா்.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தான் ஷாலினி மீண்டும் நடிக்க வருகிறாராம். சிறிய பாத்திரம் என்றாலும் வலுவான பாத்திரத்தில் நடிக்கிறாராம் . இதை மறைமுகமாக அவரே உறுதி செய்துள்ளாராம்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படம் 2022 வெளியாக உள்ளது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமும் ஒரு சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. படத்தின் பெஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மோஷன் போஸ்டர், பாடல்கள் தயாராகி வருவதாக சொல்லப்படுகின்றது