189
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இராணுவ சிப்பாய் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிப்பாய் இராணுவ சேவையில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ளன எனவும் , அதிக மன அழுத்தம் காரணமாக தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவ காவல்துறையினர் மற்றும் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
Spread the love