சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள ராணுவத்தில் பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ள சவுதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் பழமைவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என நம்புகிறார்.
அதனால், விஷன் 2030 என்ற பெயரில் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவர் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, ராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது