ஒலிம்பிக் போட்டியின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இன்று ஆரம்பமாகின்றது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றிருந்தது.
இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றது. கடந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் முறையாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெறஉள்ளது.
இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகள் இடம்பெறவுள்ள நிலையில் மொத்தம் 339 தங்கப்பதக்கங்களுக்காக போட்யெிலுவுள்ளனா்.
விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து செல்வார்கள். எனினும் கொரோனா அச்சுத்தல் காரணமாக இந்த தடவை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது