நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த டயகமவைச் சோ்ந்த 16 வயதுச் சிறுமி தீக் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி அவரின் தந்தை மற்றும் சிறுமியை அழைத்து வந்த தரகர் ஆகிய மூவரும் நேற்றையதினம் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது ரிஷாட் பதியுதீனின் வீட்டில் இதற்கு முன்னர் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரிய வந்திருந்ததனையடுத்து கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.