மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதுடன் பல வீடுகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
மீட்புப் பணியினர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்கள் மீட்டு வருவதுடன் மீட்புப் பணியில் இந்திய ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதிகளில் இந்தியக் கடற்படை மற்றும் பேரழிவு மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.