188
யாழ்.குருநகர் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஒரு தொகுதி வெடி மருந்துக்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. குருநகர் பகுதியில் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் கையாளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தியிருந்தனர். இதன்போது TNT வெடி மருந்து மற்றும் 4 டெ்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love