பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
395 பேரிடம் முன்னேடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 11 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் மீன்சந்தை வியாபாரிகள் இருவர், முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர், தனியார் பேருந்து சேவை ஊழியர் ஒருவர், வெதுப்பகம், வர்த்தக நிலையம் ஊழியர்கள் தலா ஒருவர் மற்றும் மீனவ சங்கப் பிரதி ஒருவரும் அடங்குகின்றனர்.
பருத்தித்துறை நகர அண்டி மருந்தகங்கள் உள்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வங்கிகள் திறக்கப்படுகின்றன.
பருத்தித்துறை நகரில் இருந்த பேருந்து தரப்பிடம் மூடப்பட்டுள்ளதால் டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன