ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
கொழும்பு-7, மெகென்சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல
குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள்
துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12
மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார்.
குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்
அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின்
செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.