முன்னிலை சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் நாடாளுமன்ற சுற்றவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை நேற்றையதினம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது அதனை தடுத்து நிறுத்த முயற்சித்த மஹரகம காவல்நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்துள்ளதாகவும் அவரது இரண்டு விரல்கள் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிகாவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தொிவித்துள்ளாா்.
காவல்துறையினரின் ஆணையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை தகர்த்துத் முன்னோக்கி செல்ல முயற்சித்த போதே அவா் இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.