152
இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக கொவிட் 19 தொற்றுக்குளள்ளாகி சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் நேற்றையதினம் அவரது மரணம் பதிவாகி உள்ளது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பானை என்ற ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய எய்ச். எம். குணதாச என்ற ஆதிவாசியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிாிழந்த முதலாவது ஆதிவாசி இவா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love