நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த டகயமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலினி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனிடம் விசேட காவல்துறைக் குழு ஒன்றினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு தெற்குப் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளுடன் சென்றிருந்த குறித்த விசேட காவல்துறைக்குழு, ரிஷாட் பதியுதீன் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்குச் சென்று, வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
ரிஷாட் பதியூதீனின் கொழும்பு இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைசெய்தபோது, ஜூலை 3ஆம் திகதியன்று எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹிஷாலினி ஜூலை 15ஆம் திகதியன்று உயிாிழந்திருந்தாா்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகியோரின் விளக்கமறியல் ஓகஸ்ட் 23ஆம் திகதி வரையிலும், நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது