கொரோனா வைரஸ் நோயின் தீவிர நிலையில் சிகிச்சை அளிப்பதற்குமூன்று மருந்து வகைகளைப் பரீட்சித்துப் பார்க்கின்ற மருத்துவப் பரிசோத னையை(clinical trial) உலக சுகாதார அமைப்பு தொடக்கியுள்ளது.
மூன்று வகையான தீவிர நோய்களுக்குத் தற்சமயம் பயன்படுத்தப்பட்டுவருகின்ற மருந்துகளை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுத்த முடியுமா என்பதை அறிந்து கொள்வதே இந்தப் பரிசோதனைகளின்நோக்கமாகும்.
தீவிர மலேரியா நோயாளிகளுக்கானசிகிச்சைகளுக்குத் தற்சமயம் பாவிக்கப் படுகின்ற ஆர்ட்சுனேட் (artesunate)-சிலவகைப் புற்று நோய்களுக்குரியமருந்தான இமாடினிப் (imatinib) -உடலின் நோய்க்காப்புத் தொகுதியைத்தாக்குகின்ற சில நோய்களின் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுவருகின்ற இன்ஃப்ளிக்ஸிமாப் (infliximab) -ஆகிய இந்த மூன்று மருந்துகளுமே கொரோனா நோயின் தீவிர நிலைமையில் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் ஆர்ட்சுனேட் (artesunate) எனப் படுகின்ற மலேரியாத் தடுப்பு மருந்து ஆர்டிமிசியா(Artemisia) என்னும் மருத்துவமூலிகையை அடிப்படையாகக் கொண்டுதயாரிக்கப்படுகின்றது. சீனா,ஆபிரிக்காஉட்பப் பல நாடுகளில் ஆர்டிமிசியா மூலிகை பல நூற்றாண்டுகளாக சிறந்தநோய் எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
கொரோனா வைரஸுக்குத் தற்போதுபுழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக வேறு புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டறிகின்ற சுகாதார நிறுவனத்தின் இந்த உலகளாவிய ஆய்வுக்கு”ஒருங்கிணைந்த மருத்துவப் பரிசோதனை” (Solidarity clinical trial) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் உறுப்புநாடுகளில் 56 நாடுகளில் உள்ள 600மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ ஆய்வாளர்கள்இந்த மருந்துப் பரிசோதனைகளை நோயாளிகளில் மேற்கொள்ளவுள்ளனர்.-
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்.12-08-2021