யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறை நடத்தப்பட்டுள்ளதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றிருப்பதாக வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதே இன்றைய தினம் மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் வாள்களால் வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகளை வெட்டிச் சேதப்படுத்தியதுடன் பொருட்களையும் சேதப்படுத்தியதாகவும் பின்னர் பெற்றோல் குண்டு வீசிவிட்டுத் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.