சினிமா பிரதான செய்திகள்

தேசிய அளவிலான போட்டியில் அஜித் பதக்கம் வெல்வாரா?

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகா் அஜித். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவா் அண்மையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று ஆச்சரியப்படுத்தினாா்.

இதனையடுத்து அஜித் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார் . இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாகத் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வருகிறார்.

கண்டிப்பாக அவா் பதக்கம் ஜெயித்துவிடுவார் என அவருடைய ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனா. . அப்படி அவா் பதக்கம் ஜெயித்தால் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் விடயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை படத்தின் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளுக்காக படக்குழு விரைவில் ரஸ்யா பயணிக்கவுள்ள நிலையில் அத்துடன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.