2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் சிலரை கைது செய்வதற்காக, சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் சட்டத்தில் இருந்து தப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும், ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 21 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அமைச்சர், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.