Home இலங்கை ஒரு டெல்டா தொற்றாளரிலிருந்து ஆறு பேருக்கு நோய் பரவும் !

ஒரு டெல்டா தொற்றாளரிலிருந்து ஆறு பேருக்கு நோய் பரவும் !

by admin

ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியுமென்பதுடன் நோயாளர் எண்ணிக்கை பல மடங்கானால் ஒக்சிஜன் மட்டுமல்லாது சுவாசக் கருவிகள் , செயற்கை சுவாச கருவிகள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதிலும் நெருக்கடி ஏற்பட்டு நோயாளிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படுமென வைத்தியர் எம்.ஆதவன் தெரிவித்தார்.


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,டெல்டா திரிபு மிக வேகமாக பரவி வருகின்றது. முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவை விட டெல்டா இரண்டு மடங்கு வீரியமாக பரவக்கூடியது. ஒரு டெல்டா தொற்றாளர் இன்னும் ஆறு பேருக்கு இந்த நோயை பரப்ப முடியும். 
கொழும்பு வைத்தியசாலைகளில் சரி இந்தியாவிலும் சரி தொற்று நிலைமை கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதனால் வைத்தியசாலைகளின் பராமரிக்கும் திறனுக்கு மேலாக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 


நோயாளர்கள்  எண்ணிக்கை சற்று அதிகரித்தால் யாழ்ப்பாணத்திலும் இந்நிலை ஏற்படும். இதனை நாங்கள் குறைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு தனிநபரும் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டிலிருந்து அநாவசியமாக வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவதொரு காரணத்துக்காக வெளியில் வந்தால் போதிய சமூக இடைவெளியை பேணி எல்லா நேரங்களிலும் முகக்கவசங்களை சரியாக அணிந்திருத்தல் அவசியமாகும் 
 அத்துடன் ஆலய திருவிழாக்கள் கலந்துரையாடல் ஒன்றுகூடல்களை முற்றாக தவிர்க்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்த நிகழ்வுகளிலிருந்து தொற்று பரவ கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.இதனை நாங்கள் தவிர்க்க வேண்டும்.


ஒவ்வொரு வைத்தியசாலையிலும் தங்களுடைய நோயாளர்களை பராமரிக்கும் தன்மையை பலமடங்கு அதிகரித்திருக்கின்றன.நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்தநிலையை நாங்கள் தவிர்க்க வேண்டும். 

இல்லாவிடில் ஒக்சிஜன் மட்டுமல்லாது சுவாசக் கருவிகள் செயற்கை சுவாச கருவிகள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதிலும் நெருக்கடி ஏற்பட்டு நோயாளிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More